கோலாலம்பூர், ஏப்ரல்-29, 96 ஆண்டுகள் பழைமை வாய்ந்த
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சம்மேளத்தின் தலைவராக நிவாஸ் ராகவனே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெட்டாலிங் சிவிக் சென்டரில் நடைப்பெற்ற 2024-2026 தவணைக்கான தேர்தலில், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட T.கல்யாண ராஜசேகரனை
5 வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்து நிவாஸ் பதவியைத் தற்காத்துக் கொண்டார்.
துணைத் தலைவருக்கான தேர்தலில் 256 வாக்குகள் பெற்று பிரபாகரன் வைத்தியலிங்கம் வாகை சூடினார்.
உதவித் தலைவராக பன்னீர் செல்வம் சந்திரசேகரன் வெற்றிப் பெற்றார்.
கௌரவப் பொருளாளர் பதவிக்கான தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று செல்வராஜ் ஆசீர்வாதம் வாகை சூடினார்.
இவ்வேளையில் 14 உச்சமன்ற உறுப்பினர்களுக்கான போட்டியில் 282 வாக்குகளுடன் T.பிரவீன் செல்வம் முதலிடத்தைக் கைப்பற்றினார்.
வெற்றிப் பெற்றவர்கள் 2026 வரை அப்பொறுப்புகளை வகிப்பர்.