பெனாம்பாங், ஜூலை-21 – சபா, பெனாம்பாங்கில் பேரங்காடியொன்றின் கார் நிறுத்துமிடத்தில் சண்டையிட்டுக் கொண்டதன் பேரில், பதின்ம வயது பெண் உள்ளிட்ட 2 வெளிநாட்டு பெண்கள் கைதாகியுள்ளனர்.
அவர்கள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வைரலானதை அடுத்து, வெவ்வேறு இடங்களில் வைத்து இருவரும் கைதானதாக பெனாம்பாங் போலீஸ் கூறிற்று.
கைதான முதல் நபர், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கிய 18 வயது இளம் பெண் ஆவார்.
அடி வாங்கிய 25 வயது பெண்ணிடம் முறையான பயணப் பத்திரம் எதுவுமில்லாததால் அவரும் கைதுச் செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணைத் தாக்கியதாக நம்பப்படும் மேலுமொரு பெண்ணைப் போலீஸ் தேடி வருகிறது.
அடிவாங்கியப் பெண்ணுக்கும், அடித்தவரின் கணவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகமே அச்சண்டைக்குக் காரணமென தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெண்ணொருவர், மற்ற இரு பெண்களால் சரமாரியாகக் கன்னத்தில் அறையப் பட்டு, கூந்தல் பிடித்திழுக்கப்பட்டு, எட்டி உதைக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.