கோலாலம்பூர், டிச 17 – சபாவின் 11 ஆவது ஆளுநராக டான்ஸ்ரீ மூசா அமான்
நியமிக்கப்பட்டுள்ளார். மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இன்று மூசா அமானுக்கு நியமனக் கடிதம் வழங்கினார். அவர் இன்று காலை பேரரசர் முன்னிலையில் இஸ்தானா நெகாராவில் சபா ஆளுநராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். துன் என்றழைக்கப்படும் Seri Maharaja Mangku Negara என்ற உயரிய விருதையும் சபாவின் முன்னாள் முதலமைச்சரான மூசா அமானுக்கு பேரரசர் வழங்கி சிறப்பித்தார். 73 வயதுடைய மூசா Sungai Sibuga முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். Tun Juhar Mahiruddin னுக்கு பதில் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு முதல் சபாவின் ஆளுநராக நீண்ட நாட்கள் பதவியில் இருந்துவரும் துன் Juhar டிசம்பர் 31ஆம் தேதியோடு அவரது சேவைக்காலம் ஒரு முடிவுக்கு வருகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை சபாவின் முதலமைச்சராக மூசா அமான் நீண்டகாலம் பதவி வகித்துள்ளார்.