Latestமலேசியா

சரவாக்கின் நியா குகைகளின் வளாகம் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளமாக அங்கீகாரம்

கோலாலம்பூர், ஜூலை 28 – சரவாக்கில் உள்ள நியா ( Niah ) குகைகள் வளாகம் அதிகாரப்பூர்வமாக யுனெஸ்கோ (Unesco) உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதுடில்லியில் ஜூலை 21 ஆம்தேதியிலிருந்து 31ஆம் தேதிவரை நடைபெறும் உலக பாரம்பரிய குழுவின் 46 ஆவது கூட்டத்தில் மலேசிய நேரப்படி நேற்றிரவு ஏழு மணியளவில் இந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கையொன்றில தெரிவித்தது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரதிநிதியின் தலைமையிலான 21 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த உலக பாரம்பரிய குழு நியா குகைகள் பகுதிக்கு இந்த பிரபலமான அங்கீகாரத்தை வழங்கும் முடிவை செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்தது.

நியா குகைகள் தொல்பொருள் தளத்திற்கான பரிந்துரை செயல்முறை 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்காலிக ஆவணம் பட்டியல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று முறையான நியமன ஆவணங்கள் பிரான்சின், பாரிஸில் உள்ள யுனெஸ்கோ செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் வாசிக்கப்பட்டது. இந்த அங்கீகாரத்துடன், மலேசியா இப்போது ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. Gunung Mulu தேசிய பூங்கா மற்றும் கினபாலு பூங்கா, மலாக்கா நீரிணையின் வராலாற்று நகரங்கள், ஜோர்ஜ் டவுன் வரலாற்று நகரங்கள் மற்றும் (Lenggong ) பள்ளத்தாக்கின் தொல்பொருள் பாரம்பரியம் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!