Latestமலேசியா

சரவாக்கில் பள்ளி ஆசிரியர் கழிவறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு

கூச்சிங், ஆகஸ்ட் 5 – சரவாக் பாவ் இடைநிலைப் பள்ளியிலிருக்கும் (SMK Bau) ஆசிரியர் கழிவறையில், 55 வயதான அறிவியல் மற்றும் உயிரியல் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார்.

காலை 8.15 மணியளவில் ஆசிரியர் அறையில் காணப்பட்ட அவர், கழிவறைக்குச் செல்வதாக தெரிவித்திருந்தார்.

பின்னர், காலை 8.35 மணியளவில் வகுப்பிற்கு வராததால் சக ஆசிரியர்கள் தேடியபோது, பெண்கள் ஆசிரியர் கழிவறையில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலறிந்த மருத்துவக் குழு காலை 9.08 மணிக்கு அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.

ஆரம்ப விசாரணையில் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்களோ, குற்றச்செயல் தொடர்பான எந்த அறிகுறிகளோ இல்லை என போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் திடீர் மரணம் (Sudden Death Report – SDR) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை அறிய உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!