Latestமலேசியா

சரவா அரசாங்கத்தின் ஆங்கில மொழி முக்கியத்துவத்தை முதலமைச்சர் அபாங் ஜொரி தற்காத்து பேசியுள்ளார்

கோலாலம்பூர், ஜூலை 23 – சரவா அரசாங்கத்தின் ஆங்கில மொழி முக்கியத்துவ கொள்கையை அம்மாநில முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஒப்பெங் ( Abang Johari Openg ) தற்காத்து பேசியுள்ளார். ஆங்கிலத்திற்கு, குறிப்பாக கல்வியில் மாநிலத்தின் முக்கியத்துவத்தை அவர் ஆதரித்தார். இது உலகளவில் தனித்து நிற்கும் எதிர்கால பணியாளர்களை உருவாக்குவதில் முக்கியமானது என்று அவர் கூறினார். புதிய, உயர்-வளர்ச்சித் தொழில்துறைகள் மேம்பாட்டிற்கும் , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அனைத்து வகையான அறிவியல்களிலும் அதன் பொதுவான பயன்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியின் காரணமாக ஆங்கிலம் தொடர்பு மொழி என்ற நிலைக்கு மேலாக இருப்பதாக அவர் கூறினார்.

சரவாக்கின் எதிர்காலத்திற்கு தகுதியான தொழிலாளர்கள் தேவை என்பதோடு குறிப்பாக உலகளாவிய நிலையில் போட்டியிடுவதற்கு மொழித்திறன், இளம் சரவாக்கிய சமூகத்திற்கு தேவையென அபாங் ஜொஹாரி தெரிவித்தார். நமக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது. நமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் சிறந்த கல்வியை பெற்றிருந்தால் அவர்களது எதிர்காலமும் சிறப்பாக இருக்கும். ஆனால் மொழி விவகாரத்தில் நமக்குள் மட்டுமே ஒரு கட்டுப்பாட்டை பிடிவாதமாக கொண்டிருந்தால் நமக்குள் நாமேதான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்க முடியும் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் கிராமத்து வீரர்களாக மட்டுமே இருக்க முடியும் என அபாங் ஜொஹாரி நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!