Latestமலேசியா

சாலையில் வீலிங் சாகசம்; வைரலான மோட்டார் சைக்கிளோட்டி காஜாங் போலீசிடம் சிக்கினார்

கோலாலம்பூர், ஜூலை-12, சாலையில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் wheelie சாகசம் புரிந்து வைரலான மோட்டார் சைக்கிளோட்டியை சிலாங்கூர், காஜாங் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

22 வயது அவ்விளைஞர் பண்டார் பாரு பாங்கி, ஜாலான் பெர்சியாரான் கெமாஜூவானில் அந்த ‘வீர’ சாகசத்தைப் புரிந்ததாக காஜாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் (Asisten Komisioner Nazron Abdul Yusof) தெரிவித்தார்.

உணவு விநியோகம் செய்பவரான அந்நபர், காஜாங் மாவட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைதானார்.

ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனமோட்டியதன் பேரில் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அவர் ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவுமாறுக் கேட்டுக் கொண்ட நஸ்ரோன், சாலையில் பயணிக்கும் போது பாதுகாப்பாகவும் கவனமாகவும் நடந்துக் கொள்ளுமாறு வாகனமோட்டிகளை அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!