Latestமலேசியா

சிங்கப்பூரின் செந்தோசா கோவ் பகுதியில் முதலை தென்பட்டது: 3 கடற்கரைகளில் நீர் விளையாட்டு நடவடிக்கைகள் நிறுத்தம்

சிங்கப்பூர், மே-7-சிங்கப்பூர் Sentosa Cove கடல் பகுதியில் நேற்று மாலை முதலை ஒன்று தென்பட்டதை அடுத்து, அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

​முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Siloso, Palawan மற்றும் Tanjong கடற்கரைகளில் நீச்சல் மற்றும் படகோட்டுதல் போன்ற நீர் விளையாட்டுக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

கடற்கரைகள் பொது மக்களுக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தாலும், கடற்கரை ஓரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

​பொது மக்கள் யாரும் முதலையை கண்டால் பீதியடையாமல் மெதுவாக பின்வாங்குமாறும், அதற்கு உணவு அளிக்கவோ அல்லது சீண்டவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக NParks விலங்கு மீட்பு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடற்கரைக்கு செல்வோர் பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!