
புத்ராஜெயா, மே-7-பாலியல் வீடியோவைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் முன்னாள் போலீஸ் வீரர் ஒருவர் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
36 வயது Mohd Aman Mustapa, ஓர் ஆடவர் அவரது காதலியுடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களை இஸ்லாமிய சமய அதிகாரிகளிடம் கொடுத்து விடப் போவதாக மிரட்டி பணம் கேட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.
அவர், பாதிக்கப்பட்ட நபரின் கைப்பேசியை கைப்பற்றி, அந்த வீடியோக்களை பயன்படுத்தி பணம் கோரியுள்ளார்.
முதலில் RM300 வசூலித்த அவர், தொடர்ந்து மாதந்தோறும் பணம் வழங்குமாறு பல ஆண்டுகள் அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது.
இந்தச் செயல்,போலீஸ் அதிகாரியாக இருந்தவரின் அதிகார துஷ்பிரயோகம் என புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், குற்றவாளி தனது தவறை ஒப்புக்கொள்ளாமல், விசாரணை முழுவதும் பாதிக்கப்பட்டவரையே குற்றம் சாட்டியதையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் இத்தகைய செயல்களுக்கு கடுமையான தண்டனை அவசியம் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதிச்செய்யப்பட்டு, அவரை உடனடியாக சிறைக்கு அனுப்ப உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.



