
கிளந்தான், நவம்பர் 8 – சிங்கப்பூரில் சாலை விபத்தொன்றில் பரிதாபமாக உயிரிழந்த மலேசியர் ஒருவரின் கைப்பேசியைப் பாதுகாப்பாக மீட்டுத் தருமாறு அவரது குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்து, தேடி வருகின்றனர்.
கிளாந்தானைச் சேர்ந்த 33 வயதான முஹமட் ஈஸ்மா (Muhammad Isma) என்பவர் சிங்கப்பூரில் ஹைட்ரோகிராஃபிக் சட்வேயராகப் (hygrographic surveyor) பணிபுரிந்தவராவர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று துர்தஷ்டவசமாக கார் மோதி, அதிக இரத்தபோக்கால் அவர் மரணமடைந்தார்.
இதனிடையே, அவரின் ஒரே நினைவான கைப்பேசியைத் தேடி வருகின்றனர் குடும்ப உறுப்பினர்கள்.
‘தவறுதலாக எடுத்துவிட்டாலோ அல்லது தெரிந்தே எடுத்திருந்தாலோ, பரவாயில்லை. நாங்கள் கோபப்பட மாட்டோம். அதை எங்களிடம் தயவுக்கூர்ந்து ஒப்படைத்து விடுங்கள்’ என தேடி வருகின்றனர்.
பணம் தேவைப்பட்டால், அதையும் வழங்கத் தயாராகவும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.