Latestஉலகம்

சிட்னி பல்கலைக்கழகத்தில் மாணவரைக் கழுத்தில் குத்திய பதின்ம வயதுப் பையன் கைது

சிட்னி, ஜூலை-2, ஆஸ்திரேலியா, சிட்னியில் சமயலறைக் கத்தியைக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் பதின்ம வயதுப் பையன் தாக்குதல் நடத்தியதில், ஒருவர் படுகாயமடைந்தார்.

குத்துப்பட்ட 22 வயது ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதல் நடத்திய 14 வயது பையன், தனது கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறச் சென்ற போது, போலீஸ் அவனைக் கைதுச் செய்தது.

அவன் மனநல பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளான்.

அவனின் அச்செயலால் பல்கலைக்கழக வளாகத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் போது அப்பையன் இராணுவ உடையில் இருந்துள்ளான்.

என்றாலும், தாக்குதலுக்கான காரணம் குறித்தோ, அவனின் பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் குறித்தோ இன்னும் துப்புத் துலங்கவில்லை.

என்றாலும், பயங்கரவாத சிந்தாந்த கும்பல்களுடன் அவனுக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) போலீஸ் துணை ஆணையர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!