
சிரம்பான், ஜூலை-2 – சிரம்பான், ஜாலான் புக்கிட் கிறிஸ்டல் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வீட்டினுள்ளிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து நேற்று மாலை 5 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் போலீஸிடம் புகார் தெரிவித்தார்.
போலீஸ் வந்து 3 சடலங்களையும் மீட்டது.
மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாகக் கூறிய சிரம்பான் போலீஸ், மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவித்தது.
சடலங்கள், சவப்பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வேளையில், அவ்வீட்டில் ஒரு தம்பதியும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் 30 வயது மகனும் வசித்து வந்ததாக பக்கத்து வீட்டார் கூறினர்.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை அவர்களை வெளியில் கண்டதாகவும் அந்த அண்டை வீட்டுக்காரர் சொன்னார்.