பெய்ஜிங், செப்டம்பர் -4, சீனாவில் ஏராளமான பள்ளிகளில் வகுப்பறை மேசைகள் கட்டில்களாக தரமுயர்த்தப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் வசதியாக தூங்குவதற்கு ஏதுவாக அவ்வாறு செய்யப்படுகிறது.
உதாரணத்திற்கு, கிழக்கு சீன மாநிலமான JiangXi-யில் உள்ள மாவட்டமொன்றில் 8 பள்ளிகளில் 1,966 ‘சோம்பேறி’ நாற்காலிகளும், இலகுவாக மடிக்கக் கூடிய மேசைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் சாய்ந்தமர்ந்து ஓய்வெடுக்க அவ்வசதிகள் துணைபுரிகின்றன.
நாற்காலிக்கு கீழுள்ள ஓய்வெடுக்கும் பகுதியை வெளியே இழுக்க மாணவர்களுக்கு சில வினாடிகளே தேவைப்படுகின்றன.
நண்பகல் ஓய்வு நேரத்தின் போது படுத்துறங்க ஏதுவாக, மேசையின் உயரத்தை ஏற்றி இறக்கவும் மாணவர்களுக்கு வாய்ப்புண்டு.
முன்பெல்லாம் கழுத்து வலிக்க, மேசையில் தலையைக் கவிழ்த்து வைத்தே மாணவர்கள் ஓய்வெடுக்கும் நிலை இருந்தது.
இனி அந்த கவலையில்லை என பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறினார்.
சீனாவில், பள்ளி நேரத்தின் போது நண்பகலில் மாணவர்கள் படுத்துறங்குவது வழக்கமாகும்.