பெய்ஜிங், ஏப்ரல் 26 – சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் தங்களைக் குழந்தை போல் பராமரித்து வந்த பெண்ணை, இரண்டு இராட்சத Panda கரடிகள் திடீரென தாக்கி பரபரப்பை ஏற்படுத்தின.
இதனால் அலறிப் போன பார்வையாளர்கள் பயத்தில் கத்திக் கூச்சலிட்டனர்.
Chongqing மிருகக்காட்சி சாலையில் செவ்வாய்க்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்தது.
வழக்கம் போல் அந்த Panda கரடிகளுக்கு அப்பராமரிப்பாளர் உணவளிக்கச் சென்ற போது, கூண்டில் இருந்து ஆக்ரோஷமாக வெளியே வந்த அவையிரண்டும் சேர்ந்து, அப்பெண்ணைக் கீழே சாய்த்தன.
அவற்றில் ஒரு கரடி அப்பெண்ணின் கனுக்காலைக் கடிக்க முயன்று பின்னர் தரையில் விழுந்துக் கிடந்தவரின் மேலேறியது.
இரண்டும் சேர்ந்து அப்பெண்ணின் கழுத்தைக் கடிக்கவும், தலையில்ல கீறவும் தொடங்கியதால் பெரும் அச்சத்திற்குள்ளான அவர் அவற்றின் பிடியில் இருந்து தப்பிக்கக் கடுமையாகப் போராடினார்.
ஒரு கரடி பின்னர் ஓடிவிட்ட நிலையில், இன்னொன்று அப்பெண்ணின் சட்டையைப் பின்னால் இருந்து கிழித்து விட்டது.
சகப்பணியாளர் பதறியடித்து ஓடி வந்து அக்கரடியை விரட்டியடித்து அப்பெண்ணைக் காப்பாற்றினார்.
நல்ல வேலையாக அப்பராமரிப்பாளருக்கு சிரய்ப்புக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.