பட்டர்வெர்த், ஏப் 19 -பினாங்கு சுங்கத் துறையினர் இம்மாதம் 4 ஆம் தேதியன்று Glugor, Bukit Gambir ரில் சீன மூலிகை தேயிலை பேக்கெட்டில் சுற்றப்பட்ட 966,976 ரிங்கிட் மதிப்புள்ள 30 கிலோ Methamphetamine போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். வேவுத் துறையின் தகவலின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட கண்காணிபு நடவடிக்கையைத் தொடர்ந்து அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பினாங்கு சுங்கத்துறையின் இயக்குனர் Roselan Ramli தெரிவித்தார். இரவு 9.30 மணியளவில் ஒரு மரத்தடியில் இரண்டு பைகள் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நாங்கள் குடியிருப்புப் பகுதியில் சோதனைகளை மேற்கொண்டோம்.
முதற்கட்ட சோதனையில் பைகளில் போதைப்பொருள் இருந்திருக்கலாம் என்று தெரியவந்தது.நாங்கள் எட்டு மணி நேரம் அப்பகுதியில் காத்திருந்தோம், ஆனால் யாரும் வரவில்லை. பின்னர் சோதனைகளுக்காக பைகளை எடுத்துச் சென்றோம். போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கண்டறிவது உட்பட இது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறோம் என Roselan தெரிவித்தார்.