Latestமலேசியா

குற்றவியல் கும்பலின் நிதியை நிர்வகிக்கும் செராஸ் கால் சென்டரில் அதிதரடி சோதனை; எண்மர் கைது

பிற குற்றச் செயல்களுக்கு நிதியை நிர்வகிப்பதாக நம்பப்படும் Cheras சிலுள்ள  ஒரு call centreரை போலீஸார்  நடத்திய சோதனையில் எண்மர் கைது செய்யப்பட்டதாக  புக்கிட் அமான் வர்த்தக  குற்றவியல் விசாரணைத்துறையின்  இயக்குனர்  கமிஷனர்  Ramli Mohamed Yoosuf  தெரிவித்திருக்கிறார்.  அவர்களில் ஏழு சீனப்  பிரஜைகளும் ஒரு  வியட்னாமியரும் அடங்குவர்.  இவர்களில் அறுவர் மீது  இம்மாதம்  16 ஆம்தேதி   நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக  அவர் கூறினார். ஏப்ரல் 10 ஆம் தேதி  நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மூலம் இந்தக் குழு மார்ச் 24 முதல் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.  சீன நாட்டினரை இலக்காகக் கொண்ட போலி வேலை மோசடிகளில் ஆன்லைன் மோசடி இலாபங்களைக் கணக்கிடுவதற்கு பதிவுகள் மற்றும் கணக்கியல் அமைப்புகளை இக்கும்பல் வழங்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது. 

இந்த குழு ஆன்லைன் மோசடி கும்பல்களுக்கான  நிதி மேலாண்மை அமைப்புகளின் programmerகள் என கண்டறியப்பட்டது. அவர்கள் தங்கள் அமைப்புகளின் பயன்பாட்டிற்காக ஒரு மாதத்திற்கு RM1,000 வரை வசூலித்தனர். தங்கள் அமைப்புகளுடன் தொடர்புடைய ஏதேனும் சிக்கல்களுக்கு அவர்களும் பொறுப்பாவார்கள். தற்போது சீனாவில் உள்ள ஐந்து வாடிக்கையாளர்களுக்கு இதை விற்றிருப்பதாக இன்று  புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் Ramli  தெரிவித்தார்.  cryptocurrencyயை  பயன்படுத்தி பரிவர்த்தனைகள் சீனாவை தளமாகக் கொண்ட குற்றவியல் முதலாளிகளால் தயாரிக்கப்பட்ட e-wallets  மூலமாக செலுத்தப்பட்ட  நிதியைக் கொண்டு நடத்தப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!