Latestமலேசியா

சுங்கை சிப்புட்டில் காணாமல் போன 10 வயது பூர்வகுடி சிறுமி சடலமாக மீட்பு

சுங்கை சிப்புட், ஆகஸ்ட்-18 = பேராக் சுங்கை சிப்புட்டில் ஒரு நாளாக காணவில்லை எனக் கூறப்பட்ட 10 வயது பூர்வக்குடி சிறுமி, Pos Kuala Mu, கம்போங் பெர்சாவில் இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

அக்கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன நான்காமாண்டு மாணவியான நூராய்னா ஹுமாய்ரா ரோஸ்லி (Nuraina Humaira Rosli), சனிக்கிழமை மாலை அங்குள்ள சதுப்பு நிலமொன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

சவப்பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை, தற்சமயத்திற்கு அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக, சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் மொஹமட் கைசாம் அஹ்மட் ஷஹாபுடின் (Mohd Khaizam Ahmad Shahabudin) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!