நிபோங் தெபால், ஜூன் 13 – Institut Aminuddin Baki-யின் முன்னாள் இயக்குநரான டாக்டர் ஜொஹாரி அரிப்பின் ( Joohari Arifin ) எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் Sungai Bakap சட்டமன்ற இடைத்தேர்தலில் PKR – Pakatan தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் நடவடிக்கைக்கான கூட்டுக் குழுவின் தலைவர் ரபிசி ரம்லி ( Rafizi Ramli ) இதனைத் தெரிவித்தார். ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளும் டாக்டர் ஜொஹரியை வேட்பாளராக நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கு முன் டாக்டர் ஜொஹாரியை Sungai Bakap சட்டமன்ற இடைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு பி.கே.ஆர் கட்சியின் தலைமைத்துவ மன்றம் அங்கீகரித்ததை தொடர்ந்து அவரது பெயர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக நேற்றிரவு Simpang Ampat ட்டில் ஒன்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் அறிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது ரபிசி ரம்லி தெரிவித்தார்.
உள்ளூரை சேர்ந்த வேட்பாளராகவும், சிறந்த கல்வித் தகுதி , அனைத்து நிலையிலான மக்களுக்கும் சேவை செய்யும் பிரதான தகுதியை கொண்டிருப்பதால் டாக்டர் ஜொஹாரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரபிசி ரம்லி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பினாங்கு முதலமைச்சர் சௌ கூன் இயோ
( Chow kon Yeow ) , பினாங்கு பி.கே.ஆர் தலைவர் நுருல் இஷா அன்வார்
( Nurul Izzah Anwar ,) பினாங்கு மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ மூசா ஷேய்க் பாட்ஷீர் , (Musa Sheikh Fadzir) பக்காத்தான் ஹரப்பான் மற்றும் மாநில தேசிய முன்னணி தலைவர்களும் கலந்துகொண்டனர்.