
சுங்கை பூலோ, மே-11– கடந்த சனிக்கிழமை, சுங்கை பூலோவின் புக்கிட் லாகோங் (Bukit Lagong) வனப்பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத சேவல் சண்டை சூதாட்ட நடவடிக்கையைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர். .
சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவும் கால்நடை சேவைகள் துறையும் இணைந்து மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்தோனேசியர்கள் உட்பட 22 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் உள்ளூரைச் சார்ந்தவர்கள் எனவும் 12 பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள் எனவும் அறியப்படுகின்றது.
ஒவ்வொரு சேவல் சண்டைக்கும் 500 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை பந்தய பணம் செலுத்தப்பட்டது ஆரம்பிக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சோதனையின்போது, 12 உயிருடன் இருந்த சேவல்களும் ஒரு இறந்த சேவலும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



