Latestஉலகம்

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா முன்கூட்டியே விடுதலை

பேங்காக், மே-11-தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவட்ரா
( Thaksin Shinawatra ) சிறையிலிருந்து முன்கூட்டியே இன்று விடுதலை செய்யப்பட்டார்.

76 வயதுடைய தக்சின் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கடந்த செப்டம்பர் மாதம் ஓர் ஆண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு நான்கு மாத கால பாரோலின்போது மின் கண்காணிப்பு சாதனத்தை அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

சிறையிலிருந்து வெளியே வந்த அவர் தனது குடும்ப உறுப்பினரை தழுவிக் கொண்டதை பார்க்க முடிந்தது.

மேலும் அவரது விடுதலையை வரவேற்கும் வகையில் அவரது ஆதரவாளர்களும் சிறைக்கு வெளியே திரண்டிருந்தனர்.

குடும்பத்தால் வழிநடத்தப்படும் பியூ தாய் (Pheu Thai ) கட்சி, 21 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தின் மிகவும் வெற்றிகரமான அரசியல் கட்சிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஷினாவத்ரா குடும்பம் நான்கு பிரதமர்களை உருவாக்கியதோடு, கிராமப்புற சமூகங்களிடமிருந்து வலுவான ஆதரவையும் பெற்றுள்ளது.

எனினும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் மிகவும் மோசமாக தோல்வி கண்டு மூன்றாவது இடத்தையே (Pheu Thai ) பெற்றது.

தற்போதைய பிரதமர் அனுதின் சர்ன்விரகு (Anutin Charnviraku ) தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் Pheu Thai கட்சி இடம் பெற்றுள்ளதால் தக்சினின் அரசியல் பிரவேசம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!