கோலாலம்பூர், ஏப்ரல் 15 – சிலாங்கூர், சுபாங், பேரங்காடி ஒன்றின் வளாகத்திலுள்ள கடைக்கு, வளர்ப்பு நாயை அழைத்து வந்த பெண் ஒருவர், தனது செயலை நியாயப்படுத்த முயலும் வீடியோ வைரலாகியுள்ளது.
அப்பெண் ஒத்துழைக்க மறுத்ததையடுத்து, கடையின் ஊழியர் ஒருவர் அந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் கையில் வளர்ப்பு நாயை தூக்கிக் கொண்டு கடைக்குள் நுழைய முற்படுகிறார்.
எனினும், அங்கிருந்த பணியாளர்கள், செல்லப்பிராணிகளுக்கு அனுமதி இல்லை என்ற கொள்கையை அவரிடம் பணிவாக கூறுகின்றனர்.
அதனால், எரிச்சல் அடையும் அப்பெண் தனது செயலை தற்காத்து பேசி விவாதத்தில் ஈடுபடுகிறார்.
நிலைமை கைமீறி போனதால், இறுதியில் பாதுகாவலர் உதவி நாடப்படுகிறது.
அச்சம்பவத்தை பதிவுச் செய்யும், பணியாளருக்கு அப்பெண் எச்சரிக்கை விடுக்கும் காட்சிகளையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
Zetyzarina எனும் பயனரால் டிக்டொக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவை, இதுவரை 30 ஆயிரம் பேர் பார்வையிடப்பட்டுள்ள வேளை ; ஈராயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பெண்ணின் செயலை இணையப் பயனர்கள் பலர் கடுமையாக சாடி வருகின்றனர்.