Latestமலேசியா

சுபாங் ஜெயாவில் பெட்ரோல் நிலையத்திற்கு முன் கொள்ளை முயற்சியின்போது வாகனத்தின்மீது ஆயுதத்தை தூக்கிவீசிய குற்றச்சாட்டை ஆடவன் மறுப்பு

கோலாலம்பூர், ஆக 13 – கெசாஸ் (Kesas) நெடுஞ்சாலையில் கடந்த வாரம் ஒரு வாகனத்தின்மீது ஆயுதத்தை தூக்கி வீசிய குற்றச்சாட்டை 32 வயதுடைய நாகேந்திரன் என்ற ஆடவன் மறுத்தான். மாஜிஸ்திரேட் Sasha Diana முன்னிலையில் அந்த நபருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. நோர் நபிலா ஹூடா ஜைனி (Noor Nabila Huda Zaini) என்ற பெண்மணிக்கு சொந்தமான Toyota Estima காரின் கண்ணாடியை சேதப்படுத்தும் நோக்கத்தில் ஆயுதத்தை தூக்கிவீசியதாக நாகேந்திரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சுபாங் ஜெயாவிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகே ஆகஸ்டு 7 ஆம்தேதி அதிகாலை ஒரு மணியளவில் நாகேந்திரன் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் 37 வயதுடைய நோருக்கு 100 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 427ஆது விதியின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது அவ்விரண்டும் விதிக்கப்படும் என குற்றஞ்சாட்டப்பட்டது. வேலையில்லாத நபரான நாகேந்திரன் சுபாங் ஜெயா, யு.எஸ்.ஜே (USJ) தலைமையகத்தில் மெத்தபெத்தமின் போதைப் பொருளை உடலில் செலுத்திக் கொண்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அந்நபருக்கு 5,600 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி அந்நபர் மீதான குற்றச்சாட்டு மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பில் நான்கு ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!