Latestமலேசியா

சூரியா KLCC ‘வாலட் பார்க்கிங்கில்’ நிறுத்தப்பட்டிருந்த கார் களவு ; சந்தேக நபர் சிக்கினான்

கோலாலம்பூர், ஜூலை 8 – தலைநகர், சூரியா கேஎல்சிசி (KLCC) பேரங்காடியின், “வாலட் பார்க்கிங்கில்” நிறுத்தப்பட்டிருந்த கார் களவு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவத்தை, தமது முகநூல் பதிவு வாயிலாக, சூரியா கேஎல்சிசி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், காரின் GPS அமைப்பு மற்றும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக, சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டதாக அது கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட “வாலட் பார்க்கிங்கில்” பணியில் இருந்த ஊழியர் ஒருவரால், பார்க் செய்யப்பட்ட காரை, ஆடவன் ஒருவன் லாவகமாக திறந்து ஓட்டிச் செல்லும் காட்சிகள், CCTV காமிரா பதிவில் இடம்பெற்றுள்ளன.

இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்ய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுமென
சூரியா கேஎல்சிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கேஎல்சிசி “வாலட் பார்க்கிங்கில்” தனது ஹோண்டா HRV வாகனத்தை நிறுத்த சொல்லிவிட்டு, அதன் சாவியை ஒப்படைத்துச் சென்ற Zach Khai Shin எனும் நபர், திரும்ப வந்து பார்த்த போது தமது வாகனத்தை காணவில்லை என முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து அச்சம்பவம் அம்பலமானது.

பின்னர் அந்த வாகனம் சுபாங்கில் அடையாளம் காணப்பட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாவி “வாலட் பார்க்கிங்” நிர்வாகத்திடம் பத்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!