Latestமலேசியா

செர்டாங்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வங்காளதேசி ERL ரயில் மோதி பலி

செர்டாங், ஜூன்-15 -சிலாங்கூர் செர்டாங்கில் ERL விரைவு ரயில் மோதி வங்காளதேச ஆடவர் பலியானார்.

நேற்று மாலை Taman Serdang Perdana-வில் KLIA Express தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட போது 42 வயது அந்நபர் ரயிலால் மோதப்பட்டார்.

Seri Kembangan, Jalan Serdang Perdana 5 செல்வதற்காக வேலிப் பகுதியில் அத்துமீறி தண்டவாளத்தில் அவர் இறங்கியதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர்
AA அன்பழகன் தெரிவித்தார்.

அவரின் சடலம் 5 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

அந்நபர் எதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்றார் என்பது விசாரிக்கப்படுகிறது; என்றாலும் நண்பர் வீட்டுக்குச் செல்லவே அந்த குறுக்கு வழியில் அவர் இறங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

மற்றபடி அவரின் மரணத்தில் இதுவரை குற்ற அம்சம் எதுவும் இல்லை என அன்பழகன் சொன்னார்.

2020-ல் மலேசியா வந்த அவ்வாடவர் ஜொகூரில் குத்தகைத் தொழிலாளியாக வேலைப் பார்ப்பதாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!