செர்டாங், ஜூன் 19 – பூச்சோங்கில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் சிறப்பாக உருவாக்கப்பட்ட அறையில் 13. 5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மெத்தம்பெத்தமின் ( Methamphetamine ) மற்றும் Ketamine (Ketamine ) போதைப்பெருளை போலீசார் பறிமுதல் செய்தனர். 381 கிலோ எடையுள்ள அந்த போதைப் பொருள் திங்கட்கிழமை பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத்துறையின் இயக்குனர் கௌ கொக் சின்
( Khaw Kok Chin) தெரிவித்தார். வீட்டில் சிறப்பு கிடங்காக உருவாக்கப்பட்ட இடத்தில் நண்பகல் 12.50மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்த போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
71 பொட்டலங்களில் Ketamine மற்றும் 300 பொட்டலங்களில் Methamphetamine கண்டுப்பிடிக்கப்பட்டதாக கௌ கொக் சின் கூறினார் . அந்த கிடங்கின் உரிமையாளர் என நம்பப்படும் 36 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கிள்ளான் பள்ளத்தாக்கில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை போதைப் பொருளை விநியோகிப்பதற்கு அந்த நபருக்கு 6,000 ரிங்கிட் வழங்கப்படுவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருளை விநியோகிக்க பயன்படுத்தப்பட்டு வந்த Hyundai காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அக்காரின் பூத்தில் ( Boot ) சுமார் 80 கிலோ போதைப் பொருளை மறைத்து வைப்பதற்கான சிறப்பு பகுதியும் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் கார் இயந்திரத்தை இயக்கிய பிறகே அந்த பகுதியை திறக்க முடியும் என கொள கொக் சின் கூறினார்.