Latest

சையன் ராயனின் தாயார் மகனை புறக்கணித்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை வழங்கப்பட்டது

கோலாலம்பூர், அக் 31 –

ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் Zayn Rayyan Abdul Matiinனை புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாரான 30 வயதுடை இஸ்மனிரா அப்துல் மானப்பிற்கு ( Ismanira Abdul Manaf) கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

Ismaniraவின் வழக்கறிஞர் மற்றும் அரசு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, நீதிபதி Syahliza Warnoh இந்த தீர்ப்பை தெரிவித்தார்.

Ismaniraவுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிருபித்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

மேல் முறையீட்டின் முடிவு தெரியும்வரை தண்டனையை ஒத்திவைக்கும்படி Ismanira செய்துகொண்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

Ismanira மற்றும் அவரது கணவரான 30 வயதுடைய Zaim Ikhwan Zahari ஆகிய இருவரும் தங்களது மகனை உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் வகையில் புறக்கணித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி நண்பகல் மற்றும் மறுநாள் இரவு மணி 9.55க்குமிடையே இக்குற்றத்தை புரிந்துதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சிறுவன் Zayn காணாமல் போனதாகக் கூறப்பட்ட மறுநாள் இரவு 9.55 மணியளவில் , Damansara Damai. PJU வில் அவன் தங்கியிருந்த Idaman அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு ஓடையில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டது.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரத்தை அரசு தரப்பு நிருபிக்க தவறியதால் Zayn ராயனின் தந்தை Zaim Ikhwan Zahariயை கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் விடுதலை செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!