Latestமலேசியா

சைவ உணகின் ஜாம்பவான்; மலேசியாவின் 7வது சரவணா பவன் கிளை செந்தூலில் திறப்பு

செந்தூல், மே-2,

உலகப் புகழ்பெற்ற இந்திய சைவ உணவகச் சங்கிலியான ‘சரவணா பவன்’, கோலாலம்பூர், செந்தூலில் தனது புதிய கிளையை மிக பிரமாண்டமாகத் தொடங்கியுள்ளது.

இது மலேசியாவில் இந்நிறுவனத்தின் 7-வது கிளையாகும்.

Sentul Barat MRT நிலையம் அருகில் அமைந்துள்ள புதிய வளாகத்தில் திறப்பு விழா அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பிரிக்ஃபீல்ட்ஸ், பங்சார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் சரவணா பவன், இப்போது செந்தூல் பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்துள்ளது.

சுமார் 100-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது.

சரவணா பவன் உரிமையாளர், நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவரான சிவகுமார் முன்னிலையில், முன்னாள் செனட்டரும் ம.இ.கா முன்னாள் தேசியத் உதவித் தலைவருமான டத்தோ டி. மோகன் மற்றும் அவரது மனைவி புதிய கிளையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

கிளை உரிமையாளர் டத்தோ T மோகனுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு மரியாதை செய்தார்.

பின்னர் வணக்கம் மலேசியாவிடம் பேசிய டத்தோ மோகன், 7-ஆவது கிளை திறப்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இவ்வேளையில் செந்தூலில் கிளை அமைத்ததற்கான காரணம் குறித்து விளக்கிய அதன் உரிமையாளர், மக்கள் அளித்து வரும் உற்சாகமான வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், பொது மக்கள் அனைவரும் வந்து தரமான சைவ உணவைச் சுவைக்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

பாடல், நடனம் மற்றும் அறுசுவை உணவோடு இந்தத் திறப்பு விழா நிறைவு பெற்றது.

30-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள சரவணா பவன் உணவகம் இனி செந்தூல் மக்களுக்கும் புதியத் தேர்வாக விளங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!