Latestமலேசியா

மலேசிய பாடகர் சுபிர் கான் – ஹேமா மாலினி திருமணம்; குடும்பத்தினர் முன்னிலையில் புதிய வாழ்க்கை தொடக்கம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-1-பிரபல தமிழ் மற்றும் மலாய் பாடகர் சுபிர் கான் (Zubir Khan), மருத்துவர் ஹேமா மாலினியை (Dr. Heama Maleini) திருமணம் செய்து புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

​வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த எளிமையான திருமண விழாவில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர்.

பாரம்பரிய உடையில் கம்பீரமாக காட்சியளித்த இந்த ஜோடி, தங்களின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் வாழ்த்திய அனைத்து இரசிகர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

​விரைவில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலைத்துறையினரையும் நண்பர்களையும் அழைத்துச் சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

​மணமக்களான சுபிர் கான் மற்றும் ஹீமா மாலினி தம்பதியினருக்கு நமது இனிய நல்வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!