Latestஉலகம்

2019 ஶ்ரீ லங்கா ஈஸ்டர் குண்டுவெடிப்பு: தாக்குதலைத் தடுக்கத் தவறிய இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

கொழும்பு, ஆகஸ்ட்-1-இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக, இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில், முன்னாள் போலீஸ் தலைவர் புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் தற்காப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர், கடமைத் தவறிய குற்றத்திற்காகக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய உளவுத் துறையின் முன் எச்சரிக்கைகளை இவர்கள் அலட்சியப்படுத்தியதாக நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது.

இரு அதிகாரிகளும் பொது மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

என்றாலும், ​இலங்கையில் 1976-ஆம் ஆண்டு முதல் மரண தண்டனை நிறைவேற்றப்படாததால், இந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!