Latestமலேசியா

சொகுசு SUV கார் சாலையில் திடீரென தீப்பற்றிக் கொண்டது; உயிர் தப்பியக் காரோட்டி

சுங்ஙை பெசார், மே-20 – தான் ஓட்டிச் சென்ற SUV சொகுசுக் கார் சிலாங்கூர், சிம்பாங் லீமா, சுங்ஙை நிப்பாவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில், ஆடவர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

அச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் நிகழ்ந்தது.

BMW X5 காரின் Dashboard பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியதை அறிந்து 46 வயது காரோட்டி உடனடியாக காரை நிறுத்தினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்ததில், அவர் உடனடியாக காரில் இருந்து வெளியேறி காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

அந்த BMW கார் ஏறக்குறைய முழுவதுமாக தீயில் எரிந்துப் போனது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!