Latestமலேசியா

சொந்த மகளை கற்பழித்த ஆடவனுக்கு 20 ஆண்டு சிறை 5 பிரம்படி

சிரம்பான், மே 8 – 20 வயதுடைய சொந்த மகளை தொடர்ந்து கற்பழித்த குற்றத்திற்காக 44 வயதுடைய ஆடவனுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 5 பிரம்படிகள் விதிக்கப்பட்டன. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Mohamad Kamil Nizam முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 44 வயதுடைய அந்த ஆடவன் அந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை. குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டாலும் பொது நலன் கருதி கடுமையான தண்டனையை எதிர்நோக்க வேண்டும் என்பதற்காக 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படியை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த ஆடவனின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையால் அந்த இளம்பெண் பெரும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளார். அதோடு அப்பெண் ஒரு குழந்தையையும் ஈன்றதால் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிப்பதாக நீதிபதி Mohamad Kamil தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முறையற்ற குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை, பாதிக்கப்பட்ட பெண்ணை 12 வயது முதல் கற்பழித்து வந்துள்ளார். எனவே அவருக்க கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் DPP எம். கலைவாணன் இதற்கு முன் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்காக பாராளுமன்றம் சட்டத்தை திருத்தியது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது” என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் போர்ட் டிக்சனில் உள்ள Kg Pachitan னில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஆடவன் இந்த குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!