
கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – ஜப்பான் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்படவிருந்த Malaysia Airlines MH89 விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று புறப்படுவது நிறுத்தப்பட்டது.
விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருந்ததாக Malaysia Aviation Group தெரிவித்துள்ளது. விமானம் ரத்து செய்யப்பட்டு, தற்போது முழுமையான தொழில்நுட்பப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேவையான இடங்களில் உணவு, ஓய்வறை மற்றும் ஹோட்டல் வசதிகளும் வழங்கப்பட்டன.
விமானம் ஓடுபாதைக்குச் சென்றபோது கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, ஜப்பான் விமான நிலையத்தின் ஒரு ஓடுபாதையும் தற்காலிகமாக மூடப்பட்டதாக ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது.



