Latestமலேசியா

ஜியோர்ஜ்டவுன் விழாவின் முன்னோட்ட வீடியோவால் சர்ச்சை: மன்னிப்புக் கோரிய ஏற்பாட்டாளர்கள்

ஜியோர்ஜ்டவுன், ஜூலை-16, சீனர் மற்றும் இந்தியர்களின் பண்பாட்டுக் கூறுகளை மட்டுமே முன்னிறுத்தியதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, 2024 ஜியோர்ஜ்டவுன் விழா (Festival George Town 2024) ஏற்பாட்டாளர்கள், அதன் விளம்பர வீடியோவை நீக்கியதோடு மன்னிப்பும் கோரியுள்ளனர்.

அந்நிகழ்வின் முன்னோட்ட வீடியோ (teaser video) சில தரப்பினரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருப்பதால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கையொன்றில் ஏற்பாட்டுக் குழு கூறியது.

அது வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்தோடோ செய்யப்படவில்லை; என்றாலும், மக்கள் தவறாகப் புரிந்துக் கொள்வதைத் தவிர்க்கும் விதமாக, அதனை நீக்க முடிவுச் செய்யப்பட்டது.

பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் முக்கியமென்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம்; வளமான மலேசிய மடானி மக்கள் உருவாக்கத்திற்கு இந்த ஜியோர்ஜ்டவுன் விழா தொடர்ந்து பாடுபடும் என ஏற்பாட்டுக் குழு மேலும் கூறியது.

அவ்வீடியோவை நீக்கி விட்டு, ஏற்பாட்டாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சமூக ஆர்வலர் அப்துல் ரஹ்மான் மைடின் (Abdul Rahman Maidin) முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.

பினாங்கிலுள்ள மலாய்க்கார்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அது இருப்பதாக, மக்கள் விழிப்புணர்வுக் கழகத்தின் (Institut Kesedaran Rakyat) தலைவருமான அவர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!