
ஜோகூர், அக்டோபர் 7 – ஜோகூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளும் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை இரண்டு நாட்களுக்கு மூடப்படுமென மாநில கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் டாக்டர் முஹமட் நக்கிப் முகமட் கசாலி (Dr Muhammad Naqib Md Ghazali) தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமலிருக்க வீட்டிலிருந்து கற்கும் முறை (PdPR) அமல்படுத்தப்படும் .
இந்த காலகட்டத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்படும். பெற்றோர் குழந்தைகளின் உடல்நிலையை கவனித்து, வெளியில் செல்வதை குறைக்கவும், போதுமான தண்ணீர் குடிக்கச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருமல், தொண்டை வலி அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.



