Latestமலேசியா

ஜோகூர் சாலை விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் பலி!

ஜோகூர் பாரு, அக்டோபர் 27 – ஜோகூர் பாரு –கேலாங் பாத்தா (Gelang Patah)–பெண்டாஸ் (Pendas) சாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று காலை 7.20 மணியளவில் 24.9ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

இஸ்கண்டார் புத்ரி (Iskandar Puteri) மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ராடின் ரம்லான் ராடின் தாஹா (ACP Radin Ramlan Radin Taha) கூறுகையில், லீமா கெடாய் (Lima Kedai) நோக்கிச் சென்ற கார், வளைவில் சென்றபோது ஈரமான சாலையில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறச் சாலையில் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, கேலாங் பாத்தாவிலிருந்து (Gelang Patah) வந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியது.

இந்த விபத்தில் 34 மற்றும் 50 வயதுடைய இரு உள்ளூர் ஆடவர்கள் தலையிலும் வலது காலிலும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் இரு பயணிகளுக்குத் தலை, முகம் மற்றும் வலது காலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஜோகூர் பாருவிலுள்ள (Johor Bahru) சுல்தானா அமினா மருத்துவமனைக்கு (Hospital Sultanah Aminah) அனுப்பப்பட்டன.

இந்த விபத்து குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. விபத்து தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையைத் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!