Latestமலேசியா

ஜோகூர் பாருவில், கடன் வாங்கிய நால்வருக்கு எரியூட்ட முயற்சி ; கர்ப்பிணி பெண் உட்பட மூவருக்கு எதிராக குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு, ஏப்ரல் 25 – உரிமம் இல்லாத வட்டி முதலையிடம், கடன் பெற்ற நால்வருக்கு எதிராக தீவைப்பு தாக்குதலை நடத்தியதாக, கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட நால்வருக்கு எதிராக, ஜோகூர் பாரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், மூன்று மாத கர்ப்பிணியான 42 வயது வீனோ சிவ் மெங் யிங், 32 வயது அப்துல் ஹலிம் மாட் நோர், 37 வயது நுராஸ்மான் ஹசான் ஆஷாரி, 58 வயது லியூ சூன் கியான் ஆகிய அந்நால்வரும் தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

குற்ற அறிக்கைப்படி, சியூ மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய இருவர் மீது தலா ஐந்து குற்றச்சாட்டுகளும், நுரஸ்மானுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளும், லியூ மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.

கடன் பெற்ற நாவரின் வீடுகளையும், வாகனங்களையும் சேதப்படுத்தும் நோக்கில், மார்ச் பத்தாம் தேதிக்கும் 27-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தின் தெரிவிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படலாம்.

சியூ மற்றும் அப்துல் ஹலீமை தலா 70 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், நுராஸ்மானை 56 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், லியூவை 14 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும் விடுவிக்க இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை மே 23-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!