
ஜோகூர் பாரு, அக் 29 – ஜோகூர் பாரு, செந்தோசா பகுதியில் அனைத்துலக சமய ஊர்வலத்தின்போது வெளிநாட்டுக் கொடியை பறக்கவிட்ட தனிப்பட்ட கும்பலின் நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பண்பாடு இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் புகார் ஒன்றை போலீஸ் பெற்றுள்ளதாக தென் ஜொகூர் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரவ்ப் செலமாட் ( Raub Selamat ) தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதி மற்றும் தண்டைனை சட்டத்தின் 505 விதி (b) யின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மற்றும் சாட்சிகளும் விசாரணைக்கு உதவும்படி அழைக்கப்பட்டுள்ளதாக ரவ்ப் செலமாட் கூறினார்.