
குளுவாங், ஜூன்-2-ஜோகூர் பாரு – ஆயர் ஈத்தாம் சாலையில், குளுவாங் அருகே உள்ள சிம்பாங் ரெங்கம் சிறைச்சாலைக்கு எதிரே நேற்று 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்தில், 10 வயது சிறுமி உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதியம் 1.16 மணியளவில் ரெங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு வந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, Toyota Vios, Perodua Alza, Proton Wira, Mercedez மற்றும் BMW ஆகிய வாகனங்கள் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.
விபத்தில் பலியான நால்வரும் Toyota Vios காரில் பயணம் செய்தவர்கள் ஆவர்.
மோதிய வேகத்தில், 73 வயது மூதாட்டி Semek Mat Soh, காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த Mercedes காரின் மேல் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலியான மற்றவர்கள் முறையே 36 வயது Aiman Rashid, 33 வயது Nor Azlina Abd Latif, மற்றும் 10 வயது Nur Airish Syifa Sidek என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.



