
புத்ராஜெயா,மார்ச்-26- சிலாங்கூர் ஷா ஆலாமில் ஒரு விற்பனையாளர் தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை போலீஸ் விசாரிக்க வேண்டுமென, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை கேட்டுக் கொண்டுள்ளார்.
பல்லின – மத சமூகத்தில் இருக்கக் கூடாத இனவெறி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக இந்தச் சம்பவம் கூறப்படுவதால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டத்தோ ஏரன் அகோ டகாங் வலியுறுத்தினார்.
எந்தவோர் இனத்தையும் அவமதிக்கும் செயலுடன் அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது.
எனவே இனவாதச் செயல்கள் தீவிரமாகக் கையாளப்பட வேண்டுமென அறிக்கை வயிலாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வாடிக்கையாளரிடம் ஆர்டர் எடுக்கும் போது டாயாக் இன பெண் விற்பனையாளர் அவமானப்படுத்தப்பட்டு, கைவிலங்கிடப்படுவாய் என மிரட்டப்பட்டதாகவும் கூறி சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவு வைரலானது.
ஷா ஆலாமில் உள்ள ஒரு கடையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், ஓர் ஆடவர் அந்த இனவெறி வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அப்பதிவில் கூறப்பட்டது.