Latestமலேசியா

டிக்கெட் இல்லாமல் விமானமேறிய பெண்ணால் KLIA-வில் 4 மணி நேரம் தாமதமான விமானம்

செப்பாங், செப்டம்பர்-11, சீன நாட்டுப் பெண்ணொருவர் முறையான பயண டிக்கெட் இல்லாமல் விமானத்திலேறியதால், KLIA-வில் விமானப் பயணம் மணிக்கணக்கில் தாமதமானது.

ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தை சுற்றுலா இணையப் பதிவேட்டாளரான (blogger) Zhu என்பவர் சீன ஊடகமொன்றில் அம்பலப்படுத்தியுள்ளார்.

சீனாவின் Xiamen நகருக்குப் பயணமாகத் தயாராகிக் கொண்டிருந்த விமானத்தில், ஒரு பெண் சந்தேகத்திற்குரிய வகையில் கேபினைச் சுற்றி நடப்பதை Zhu கண்டிருக்கிறார்.

அவரை நெருங்கிய விமானப் பணிப்பெண், இருக்கை எண் குறித்து கேட்ட போது, தனக்கு இருக்கை இல்லையெனக் கூறி திருதிருவென முழித்தார்.

இதனால் சுதாகரித்துக் கொண்ட விமானப் பணியாளர்கள், அனைத்துப் பயணிகளையும் வெளியேறச் சொல்லி, பாதுகாப்புக் காரணங்களுக்காக தங்களது உடமைகளை சரிபார்த்துக் கொள்ள உத்தரவிட்டனர்.

டிக்கெட் இல்லாமலிருந்த பெண்ணை வெளியே கொண்டு வந்த வேளை, அவர் மீண்டும் விமானத்தினுள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியில் போலீஸ் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

அப்பெண்ணில் செயலால், மற்ற பயணிகள் மீண்டும் டிக்கெட் மற்றும் கடப்பிழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 4 மணி நேரங்கள் தாமதமாக Xianmen சென்று சேர்ந்தனர்.

விமான நிலையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பரிசோதனைகளைக் கடந்து அப்பெண்ணால் எப்படி விமானத்திலேறியிருக்க முடியும் என்பதே நெட்டிசன்களின் கேள்வியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!