Latestமலேசியா

டெக்சஸில் $25 பில்லியன் மதிப்பில் ‘Terafab’ சிப் தொழிற்சாலை; இலோன் மாஸ்க்கின் அடுத்த அதிரடி

டெக்சஸ், மார்ச்-23-Tesla மற்றும் Space X நிறுவனங்களின் அதிபதியான இலோன் மாஸ்க், ‘Terafab’ எனப்படும் புதிய சிப் உற்பத்தி திட்டத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம் ஆஸ்டின் அருகே அமைக்கப்படும் இந்த மிகப்பெரிய தொழிற்சாலை, ஆண்டுதோறும் ஒரு டெராவாட் கணினி சக்தியை உருவாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சில்லுகள் AI, ரோபோடிக்ஸ் மற்றும் விண்வெளி தரவு மையங்களுக்கு பயன்படும்.

உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளர்களான TSMC மற்றும் Samsung-கை சார்ந்திருப்பதை குறைப்பதே இவரது நோக்கம்.

இதற்கான மொத்த முதலீடு 20 முதல் 25 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்படுகிறது.

ஆனால் இத்திட்டம் முழுமையடைவதற்கான காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இது மட்டும் வெற்றியடைந்தால், semiconductor துறையில் Terafab புதியப் புரட்சியை ஏற்படுத்தி, AI தொழில்நுட்பப் போட்டியில் இலோன் மாஸ்க்கின் நிறுவனங்களுக்கு கூடுதல் பலத்தை தந்துவிடும்.

என்றாலும் அதனை அடைவதற்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், ‘மனிதகுலத்தை விண்வெளி நாகரிகமாக மாற்றும் ஒரு படியே இது’ என இலோன் மாஸ் திடமாக நம்புகிறார்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!