Latestஉலகம்

தந்தையைப் போல தனையன்; சிங்கையில் மூத்த அமைச்சராகும் லீ சியென் லூங்

சிங்கப்பூர், ஏப்ரல்-16, பதவி விலகிச் செல்லும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், அக்குடியரசின் அடுத்த அமைச்சரவையில் மூத்த அமைச்சராக சேவையாற்றுவார்.

வரும் மே 15-ஆம் தேதி சிங்கையின் நான்காவது பிரதமராகப் பதவியேற்கவுள்ள லாரன்ஸ் வோங் அதனை உறுதிப்படுத்தினார்.

தமது தலைமையிலான புதிய அமைச்சரவைப் பட்டியல், தமது பதவியேற்புக்கு சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று நடப்புத் துணைப் பிரதமரான 51 வயது லாரன்ஸ் கூறினார்.

பதவி விலகும் பிரதமர்களும் துணைப் பிரதமர்களும், புதிய அரசில் மூத்த அமைச்சர்களாகவும் (Senior Minister), மதியுரை அமைச்சர்களாகவும் (Minister Mentor) சேவையாற்றுவது சிங்கப்பூரில் ஒரு வழக்கமாகும்.

முதல் பிரதமர் மறைந்த லீ குவான் இயூ, 1990-ஆம் ஆண்டில் பதவி விலகிய போது, அடுத்து வந்த கோ ச்சோக் தோங் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இடம் பெற்றார்.

இப்போது 34 ஆண்டுகள் கழித்து அவரின் மகன் லீ சியென் லூங்கும் மூத்த அமைச்சராகிறார்.

தந்தை 30 ஆண்டுகளும், மகன் 20 ஆண்டுகளும் சிங்கப்பூரில் பிரதமராக இருந்திருப்பது சிறப்பம்சமாகும்.

2004-காம் ஆண்டு சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்ற லீ சியென் லூங், ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மே 15-ல் சிங்கப்பூரில் தலைமைத்துவ மாற்றம் நிகழும் என திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!