
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – கடந்த வாரம் 62 வயதான தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்.
குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, அந்த ஆடவன் புரிந்ததாகத் தலைஅசைத்தாலும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதால் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலையில், செராஸிலுள்ள பண்டார் பெர்மைசூரி பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அந்த ஆடவன் இந்தக் கொலையைச் செய்துள்ளான் என்று குற்றப்பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கிப்படுகின்றது.