கோலாலம்பூர், ஜூலை 25 – தலைநகர், கம்போங் பாருவிலுள்ள, PKNS அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீயில், நான்கு வாகனங்கள் முற்றாக சேதமடைந்தன.
நேற்றிரவு மணி 10.43 வாக்கில் அந்த தீ விபத்து குறித்து, கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை அறைக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, அதன் நடவடிக்கை பிரிவு கமாண்டோ முஹமட் அஸ்ரோல் மாட் ஜெனான் (Mohd Azrol Md Zenan) தெரிவித்தார்.
உடனடியாக, திதிவங்சா தீயணைப்பு மீட்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்த தீ விபத்தில், கார் ஒன்றும், மூன்று மோட்டார் சைக்கிள்களும், முற்றாக அழிந்தன.
எனினும், உயிருடற் சேதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
இரவு மணி 11.25 வாக்கில், தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீக்கான காரணமும், மொத்த இழப்பும் ஆராயப்பட்டு வருகிறது.