இந்தியா, ஏப்ரல் 3 – கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி அதில் மூழ்கியிருப்பது தற்போது உலகப் பிரச்சனையாக மாறி விட்டது.
அப்படி கைப்பேசியில் மூழ்கிய தாய் ஒருவர், கைப்பேசியை பார்த்துக் கொண்டே தன் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாத்தும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.
இச்சம்பவம், கடந்த மார்ச் 26ஆம் திகதி இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.
அக்காணொளியில், சம்பந்தப்பட்டப் பெண், கைப்பேசியில் பேசிக்கொண்டே வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்கிறார்; பக்கத்தில் அவரின் குழந்தை விளையாட்டி கொண்டிருக்கிறது.
பின்னர் அங்கிருந்த எழுந்த அப்பெண், கைப்பேசியில் மூழ்கியவாறு வெங்காயத்திற்குப் பதிலாக குழந்தையை தூக்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடுகிறார். அதன் பின்னரும் கைப்பேசியில் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், வீட்டிற்கு வந்த கணவர், குழந்தையை தேட, பதற்றத்துடன் அந்த தாயும் குழந்தையை அங்கும் இங்கும் தேட, அதிர்ஷ்டவசமாக, அக்குழந்தையின் அழுகை சத்தம் வைத்து, குழந்தை குளிர்சாதனப் பெட்டியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.