Latestமலேசியா

தானா மேராவில், பெண் கரடி பிடிபட்டது ; சுற்று வட்டார மக்கள் நிம்மதி

தானா மேரா, மே 29 – கிளந்தான், தானா மேரா, கம்போங் ஆயிர் அசஹான் ஹுலுவிலிருந்து, பெண் கரடி ஒன்றை, மாநில PERHILITAN – தேசிய பூங்கா, வனவிலங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

கடந்த சில காலமாக அப்பகுதியில் பயிர்களையும், பொருட்களையும் சேதப்படுத்தி வந்த அக்கரடி பிடிப்பட்டது குறித்து, சுற்று வட்டார மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாக, பெர்ஹிலிதான் இயக்குனர் முஹமட் ஹபீட் ரோஹானி தெரிவித்தார்.

அந்த கரடி குறித்து, இம்மாதம் 19-ஆம் தேதி, ஜெலியிலுள்ள, பெர்ஹிலிதான் அலுவலகம் புகார் ஒன்றை பெற்றதாக ஹபீட் சொன்னார்.

அதனை தொடர்ந்து, இம்மாதம் 25-ஆம் தேதி, அந்த கரடியை பிடிக்க பொறி அமைக்கப்பட்ட வேளை ; நேற்று அது வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது.

கூடிய விரைவில், அக்கரடி அதற்கு ஏற்ப இடத்தில் கொண்டு சென்று விடப்படும் எனவும் ஹபீட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!