கோலாலம்பூர், ஏப்ரல்-5, கோலாலம்பூர் தாமான் டத்தோ சேனுவில் உள்ள தாமான் செந்தூல் அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீடு தீக்கிரையானது.
வியாழக்கிழமை நண்பகல் வாக்கில் அங்கு தீ ஏற்பட்டது.
தகவல் கிடைத்து செந்தூல் தீயணைப்பு மீட்புத் துறையைச் சேர்ந்த 21 பேர் அடங்கியக் குழு சம்பவ இடம் விரைந்தது.
அடுக்குமாடி என்பதால், தீ பரவாதிருக்க Offensive மற்றும் Defensive முறையில் தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புத் துறையின் பேச்சாளர் சொன்னார்.
பிற்பகல் 3.30 மணி வாக்கில் தீ முழுமையாக அணைக்கப்பட்ட வேளை, 680 சதுர அடி கொண்ட அவ்வீட்டின் 95% பகுதி தீயில் அழிந்துப் போனது.
எனினும் யாருக்கும் அதில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
தீக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.