Latestமலேசியா

தாமான் வாஹயுவில் பல்பொருள் விற்பனைக் கடை ஊழியரிடம் ஆயுதம் ஏந்திய ஆடவர் கொள்ளை

கோலாலம்பூர், ஜூலை-29-கோலாலம்பூர், Taman Wahyu, Jalan Sibu பகுதியில் இன்று அதிகாலை பல்பொருள் விற்பனைக் கடையொன்றில் கைத்துப்பாக்கி போன்ற ஆயுதத்தை ஏந்திய நபர் கொள்ளையடித்ததில் வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியடைந்தார்.

காலை 10.01 மணியளவில் அக்கடையின் 44 வயதான செயல்பாட்டுப் பிரிவு மேலாளரிடமிருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக Sentul மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Basri Sagoni தெரிவித்தார்.

காலை சுமார் 5.45 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்நாட்டவர் என சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய ஆடவர் சாம்பல் நிற ஜாக்கெட், கால்சட்டை, கருப்பு நிற தலைக்கவசம் மற்றும் கருப்பு நிற தோள்பட்டைப் பை ஆகியவற்றை அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளார்.

அவர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அலமாரிகளிலிருந்து சில உணவுப் பொருட்களை எடுத்த பின், பணம் செலுத்தும் இடத்திற்குச் சென்று, பணப் பெட்டியைத் திறக்குமாறு வங்காளதேசப் பணியாளரைப் பணித்துள்ளார்.

அச்சந்தேக நபர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், பின்னர் அவர் WC357T என்ற பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் பணத்துடனும் சில பொருட்களுடனும் தப்பிச் சென்றதாகவும் Basri Sagoni விவரித்தார்.

அவரைத் தேடும் பணிகளுக்காக சிறப்பு நடவடிக்கை தொடக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இதனிடையே அக்கொள்ளையால் ஏற்பட்ட இழப்பு சுமார் 1,052 ரிங்கிட் என கணிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!