பேங்காக், ஆகஸ்ட் 21 – Mpox எனப்படும் குரங்கு அம்மை நோயின் திரிபு ஒருவருக்குத் தொற்றியிருக்கூடும் என அறிவித்துள்ளது தாய்லாந்து.
குரங்கு அம்மை வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருவதையொட்டி, இந்நோயை அனைத்துலக பொதுச் சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தில் அடையாளம் காணப்பட்ட அந்த நோயாளி ஆப்பிரிக்காவிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற ஐரோப்பியர் என்று தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்திருக்கிறது.
அந்த நோயாளிக்குத் தொற்றிய கிருமியின் வகையைக் கண்டறிய அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, ஆய்வுக்கூடத்தில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
குரங்கு அம்மை என்பது வைரசால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய்.
1958இல் குரங்கு அம்மை நோய், முதலில் டென்மார்க்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.