Latestமலேசியா

தீபாவளி பஜார் கட்டணம் 85% குறைப்பு – அதிகபட்சம் RM400

கோலாலம்பூர், செப்டம்பர் 21 – கோலாலம்பூரில் இந்த ஆண்டு தீபாவளி பஜாரில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கான கட்டணம் 85 விழுக்காடு குறைக்கப்பட்டு, அதிகபட்சம் 400 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 ரிங்கிட் உரிமக் கட்டணம், 150 ரிங்கிட் சேவைக் கட்டணம், 150 ரிங்கிட் தள வாடகை மற்றும் 70 ரிங்கிட் வைப்புத்தொகை உள்ளடங்கும்.

கடந்த 2025ஆம் ஆண்டு வர்த்தகர்கள் மொத்தம் 2,626 ரிங்கிட் செலுத்திய நிலையில், தற்போது கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பஜார் நடைபெறும் காலம் 21 நாட்களிலிருந்து 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, குறைந்த கட்டணத்தில் நேரடியாக DBKL-இல் விண்ணப்பிக்குமாறு வர்த்தகர்களைக் கேட்டுக்கொண்டார். இடைத்தரகர்களிடம் ஆயிரக்கணக்கான ரிங்கிட் செலுத்த வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு தீபாவளி பஜார் அக்டோபர் 9 முதல் நவம்பர் 7 வரை, Tun Sambanthan Complex வாகன நிறுத்துமிடத்திலும் Jalan Bunus 6 பகுதியிலும் நடைபெறும். மொத்தம் 172 வர்த்தக இடங்கள் வழங்கப்படவுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!